- சனிக்கிழமை, 16 மே 2015
சில காலத்திற்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜின் லோஹோர் சீமாட்டியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 300 பவூன் மூலதனத்தைக் கொண்டு லோஹோர் சீமாட்டி கடன் நிதியம் நிறுவப்பட்டது. அப்போதைய புன்னிய அலுவல்கள் பற்றி ஆணையாளர் அருட்தந்தை சீ.ஈஇவீ. நெதேனியல்ஸ் பாதிரியார் அவர்களினால் 1927ஆம் அண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தை தாபிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அக்காலப் பகுதியில் அரச துறையிலும் மற்றும் தனியார் துறையிலும் பணியாற்றிய ஊழியர்களின் குறுங்கால நிதித் தேவைகளுக்கு உதவூவதற்காக அப்போதைய வங்கி முறையினுள் திட்டங்கள் காணப்படாமையினால் அக்காலப் புகுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் வெளிநபர்களிடமிருந்து உயர் வருடாந்த வட்டி வீதத்திற்கு கடன் பெற்று வந்தனர். இதன் காரணமாக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அதிக கடன் சுமையினால் பாதிப்புக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது. லோஹோர் சீமாட்டி கடன் நிதியம் நிறுவப்பட்டமை அரசஇ அரச கூட்டுத்தாபன மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மிகவூம் துணையாக அமைந்தது.
1951 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அரச மற்றும் ஏனைய உதவியளிப்போர்களின் ஒத்துழைப்புடன் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று நிதியத்தின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்டது. இங்கு கவனிக்கத்தக்க முக்கிய விடயம்யாதெனில் 80 வருடங்களையூம் தாண்டிய காலப் பகுதியினுள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து லோஹோர் சீமாட்டி கடன் நிதியமானது அரச துறை ஊழியர்களுக்கும் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் தொழிற்பாட்டு மிகை ஒன்றினையூம் பேணி வரக்கூடியதாக அமைந்துள்ளமையாகும்.
லோஹோh; சீமாட்டி கடன் நிதியத்தில் முன்னாள் நிருவாகப் பொறுப்பாளா;கள்
பெயா | காலப் பகுதி |
அருட்தந்தை சீ.ஈ.வீ. நெதேனியல்ஸ் அவா;கள் | 1927 – 1955 |
திரு. கே.ஏ.ஜீ. எல்பட் சில்வா | 1955 – 1989 |
திரு. ஷெல்டன் பொ;ணாந்து | 1989 – 1990 |
திரு. ஜீ.ஜீ. விக்கிரமசிங்க | 1990 – 1994 |
திரு. சத்தாதிஸ்ஸ சகலசூhpய | 1994 – 1999 |
செல்வி. கமலா ரனதுங்க | 1999 – 2001 |
திரு. சீ.டீ. அமரசிறி | 2001 – 2005 |
திரு. அத்துல என். ஜயசிங்க | 2005 – 2009 |
திரு. டீ.ஜே.யூ+. புரசிங்க | 2009 – 2009 |
திரு. யூ+.பீ. ஹேவகே | 2009 – 2012 |
திரு. டப். நிமல் அபேசிறி | 2012 – 2014 |
திரு. வின்ஸ்டன் பத்திராஜ | 2015 - இன்று வரை |